நகர்புற மாணவர்கள் மட்டுமின்றி கிராமப்புற மாணவர்களுக்கும் தொழில்நுட்பக் கல்வியை வழங்கும் பொருட்டு அக்சயா அறக்கட்டளையால் நிறுவப்பட்டது எங்களது அக்சயா தொழில்நுட்பக் கல்லூரி. உலகத்திலேயே இந்தியா மிகப்பெரிய குடியரசு நாடு. நமது அறிவார்ந்த முன்னோடிகள் கண்ட கனவை நனவாக்க நமது நாட்டிற்கு எண்ணற்ற தொழில்நுட்ப அறிவுடைய பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
உலக நாடுகளில் நம் நாட்டில் மட்டும் தான் மக்கள் தொகையில் 60 முதல் 70 சதவீதத்தினர் இளைஞர்கள் இருக்கிறார்கள். நாட்டின் தரத்தையும், நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே உண்மையான கல்வியின் நோக்கமாகும். நம் நாட்டை ஒவ்வொரு துறையிலும் முன்னிலைக்கு கொண்டுவருவது கல்வி கற்ற இளைஞர்களின் தலையாய கடமையாகும்.
ஒழுக்கம், அறம், பண்பாடு மற்றும் தொழில்நுட்பக் கல்வி இவற்றை கற்பித்து சிறந்த பொறியாளர்களை உருவாக்கி கொண்டிருக்கிறது எங்களது அக்சயா கல்லூரி. தொழில்நுட்ப அறிவிலும், விண்வெளி ஆராய்ச்சியிலும் கிராமப்புற மாணவர்களும் முன்னிலைக்கு வருவதற்கு அவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆக்கப்பூர்வமான கல்வி, நடைமுறைக்கு தேவையான தொழில்நுட்ப அறிவு இவை இரண்டும் மாணவர்களுக்கும், நம் நாட்டிற்கும் உள்ள சவால்களை எதிர்கொள்ள உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சிறந்த எங்கள் ஆசிரியர்களால் இத்தகைய கல்வியை எங்களது கல்லூரி மாணவர்களுக்கு செவ்வனே வழங்கி அவர்தம் வாழ்வில் வெற்றிபெற வழிவகுத்து கொண்டிருக்கிறது.